Ads Area

சாய்ந்தமருது பள்ளிவாசலினால் 2.1 மில்லியன் பெறுமதியான நிவாரண உதவி வழங்கிவைப்பு !!

நூருள் ஹுதா உமர். 

சாய்ந்தமருது ஜூம்மா பள்ளிவாசல்  மற்றும் சாய்ந்தமருது- மாளிகைக்காடு ஜம்மியத்துல் உலமா சபை ஒருங்கிணைப்பில் சாய்ந்தமருது மக்களுக்கான நிவாரண உதவித்தொகை விநியோகம் இன்று வியாழக்கிழமை (23.04.2020) காலை 10.30 மணியளவில் சாய்ந்தமருது  ஜூம்ஆப் பெரியபள்ளிவாசலில்  நடைபெற்றது.

சாய்ந்தமருது ஜூம்மா பள்ளிவாசல்  தலைவர் அல்ஹாஜ் எம்.வை. எம். ஹனிபா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சாய்ந்தமருது- மாளிகைக்காடு ஜம்மியத்துல் உலமா சபை பிரதிநிதிகள்,  காரைதீவு உதவி பிரதேச செயலாளர் எஸ். பார்த்திபன்,  சாய்ந்தமருது பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எல்.ஏ. ஹமீட், சாய்ந்தமருது பிரதேச செயலக கணக்காளர் ஏ.எல். எம். நஜிமுதின், மாளிகைக்காடு மேற்கு கிராம நிலதாரி ஏ.எம். நஜீம்,  கல்முனை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி இந்திக்க உதயங்க, சம்மாந்துறை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி அல்ஹாஜ் ஏ.எம். நௌபர், சாய்ந்தமருது ஜூம்மா பள்ளிவாசல் செயலாளர், பொருளாளர், நிர்வாகிகள், சாய்ந்தமருது அனைத்து பள்ளிவாசல்களின் முக்கிய நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். 



இந் நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேசத்தில் நிவாரண உதவித்தொகை பெறுவதற்கு தகுதியாக இனம்காணப்பட்ட  பயனாளிகள் பட்டியலிலுள்ள சுமார் 1329 பேர்களுக்கான நிவாரணப் உதவித்தொகை குறித்த 18 பள்ளிவாசல்களின் தலைவர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. குறித்த பள்ளிவாசல்களினூடாக பயனாளிகளின் வீடுகளிற்கு தலா 1500 ரூபாய் அடங்கிய நிவாரண உதவித்தொகை விநியோகிக்கும் ஏற்பாடுகளினை குறித்த பள்ளிவாசல்களின் நிருவாகங்களே  பொறுபேற்று தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கு வழங்கிவைக்க உள்ளது. 


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe