பாறுக் ஷிஹான்-
சமுர்த்தி அலுவலக அடையாள அட்டையை பயன்படுத்தி போதைப்பொருள் கடத்தியவர் கைது
சமுர்த்தி அலுவலக அடையாள அட்டையை பயன்படுத்தி போதைப்பொருள் கடத்திய ஒருவரை சம்மாந்துறைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்
இச்சம்பவம் சம்பவம் அம்பாறை மாவட்டம் ஒலுவில் நிந்தவூர் பிரதான வீதியில் உள்ள கழியோடை பாலத்தில் சம்மாந்துறை பொலிசாரினால் தற்காலிகமாக நிர்மாணிக்கப்பட்ட சோதனைச்சாவடியில் புதன்கிழமை (14) அதிகாலை இச்சந்தேக நபர் கைதானார்.
வீதிச் சோதனைச் சாவடியில் ஈடுபட்டிருந்த சம்மாந்துறை போலீசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய தொழிலில் இருந்து நீக்கப்பட்ட குறித்த சந்தேக நபர் சமுர்த்தி அலுவலக அடையாள பயன்படுத்தி குற்றச்செயல்களில் ஈடுபடுவதாகவும்,இரு வருடங்களுக்கு முன்னர் அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் பெறப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய குறித்த சந்தேகநபரை போலீசார் கைது செய்தனர் .
இவ்வாறு கைது செய்யப்பட்ட நபரிடம் தற்போது விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர்.