தாய்மையின் உணர்வை அறியும் முன் நம் உடல் அறிந்துவிடும். அவர்களுக்கேதெரியாமல் உடல் குழந்தையைச் சுமப்பதற்குத் தயாராகிவிடும். ஆனால் சில நாட்கள் கழித்தே உடல் வெளிப்படுத்தும் சில அறிகுறிகளால் அதைக் கண்டறிய முற்படுவோம். சிலர் அதையும் உணராமல் சாதாரணமாகக் கடந்து விடுவார்கள். அப்படியிருக்காமல் முன்கூட்டியே இந்த அறிகுறிகள் இருந்தால் நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்கள் என்பதை உறுதி செய்வது அவசியம். அதற்கு ஏற்ப உடலுக்கு ஒத்துழைக்க வேண்டியதும் நம் கடமை. அதேபோல் மாதவிடாய் தள்ளிப் போவது மட்டுமே கர்ப்பத்திற்கான அறிகுறி அல்ல. அதற்கு முன்னரே சில அறிகுறிகள் உங்களுக்குத் தெரியும். அவை என்னென்ன என்பதைப் பார்க்கலாம்.
மார்பகங்கள் வலி :
இந்த அறிகுறிதான் முதலில் உங்களுக்குத் தெரியும். மார்பகங்கள் கனமாகவும், வீக்கம் ஏற்பட்டதைப் போன்ற வலி ஏற்படும். இந்த அறிகுறியை சிலர் மாதவிடாய் ஏற்படுவதற்கு முன்பும் உணர்வார்கள். கர்ப்பம் தரித்திருந்தால் தொடர்ந்து அந்த வலி இருக்கும்.
குமட்டல் :
காலை எழுந்ததும் வாய் குமட்டல் இருக்கும். எந்த காரணமுமின்றி குமட்டல் வரும். உணவு உண்டாலும் குமட்டல் ஏற்படும். இதனால் மிகவும் சோர்ந்து காணப்படுவீர்கள். உற்சாகமாக இருக்க நினைத்தாலும் உடல் ஒத்துழைக்காது. குமட்டல் அறிகுறியும் மாதவிடாய் தள்ளிப் போவதுமாக இருந்தால் உடனே மருத்துவரை அணுகி பரிசோதிப்பது அவசியம்.
சில உணவுகளுக்காக ஏங்குவீர்கள், சில உணவுகளை தவிர்ப்பீர்கள் : இதுவரை யோசித்துக் கூட பார்க்காத உணவுகள் மீது உங்களுக்கு ஆசை வருகிறதென்றாலோ அல்லது ரசித்து ருசித்த உணவுகளை வெறுக்கிறீர்கள் என்றாலோ அதுவும் கர்பத்திற்கான அறிகுறியாகும்.
வயிற்று வலி :
மாதவிடாய் காலத்தில் வயிற்று வலி என்பது சாதாரணமே. ஆனால் கர்ப்பமாக இருக்கும்போது காலை எழுந்ததுமே வலி ஏற்படும். அவ்வபோது வயிற்று வலியை உணர்வீர்கள். காரணம் கர்பப்பை விரிவடைகிறது என்று அர்த்தம். வயிறு குழந்தை தங்குவதற்கான இடத்தை உருவாக்குகிறது.
வயிறு மந்தம், அஜீரணம் :
நீங்கள் நன்குப் பசித்து உணவு உண்டாலும் மந்தமாகவும், மிதப்பது போன்றும் இருக்கும். இதற்கு ப்ரொகஸ்டரொன் ஹார்மோன் ( progesterone hormone ) செய்யும் வேலையே காரணம். இது கருத்தரித்தலை ஊக்குவிக்கும் ஹார்மோனாகும். அதேபோல் ஜீரண சக்தி மெதுவாக நடைபெறும். இதனால் மலச்சிக்கலும் ஏற்படும்.
உடல் எப்போது சூடாக இருத்தல் :
வழக்கத்திற்கு மாறாக உடல் எப்போதும் சூடாக இருப்பதை உணர்கிறீர்களா ? இதற்கும் ப்ரொகஸ்டரொன் ஹார்மோன் ( progesterone hormone ) செய்யும் வேலையே காரணம். அந்த சமயத்தில் உங்கள் உடல் ஓய்வை மட்டுமே நாடும். சோர்வாகவே இருப்பீர்கள். காலை எழுந்தாலும் உற்சாகம் இருக்காது. அதிக நேரம் தூங்கிவிடுவீர்கள்.
வாசனைகளை அதிகம் உணர்வீர்கள் :
வழக்கத்திற்கு மாறாக சில வாசனைகள் உங்களைக் கட்டி இழுக்கும். சில வாசனை குமட்டலுக்கு உள்ளாக்கும். உணவு சமைக்கும்போது வாசனையை விரும்ப மாட்டீர்கள். ஆனால் முட்டை வேக வைத்த வாசனை, மண் வாசனை போன்ற மென்மையான வாசனைகளை விரும்புவீர்கள்.
அடிக்கடி சிறுநீர் கழித்தல் :
நீங்கள் அடிக்கடி சிறுநீர் கழிக்க டாய்லெட்டை நாடுகிறீர்கள் என்றால் கர்பமாக இருக்கிறீர்கள் என்று அர்த்தம். இரவிலும் அடிக்கடி சிறுநீர் கழிப்பீர்கள். இதற்குக் காரணம், உங்கள் உடல் வெளிப்படுத்தும் கூடுதல் நீரை வெளியேற்ற ஓய்வின்றி சிறுநீர் பை வேலை செய்கிறது என்று அர்த்தம்.
இரத்தப் போக்கு :
சோர்வாக உணர்வீர்கள் :
நீங்கள் எப்போதும் போல் செய்யும் வேலைகளைத்தான் செய்கிறீர்கள். இருப்பினும் வழக்கத்தை விடவும் அதிகமான சோர்வை உணர்கிறீர்கள் என்றாலும் அதுவும் ஒருவித அறிகுறியே. இதற்குக் காரணம் உடலில் உள்ள அனைத்து உடல் பாகங்கள் மற்றும் ஹார்மோன்கள் இடைவெளியின்றி வேலைச் செய்கின்றன என்று அர்த்தம்.

