(காரைதீவு சகா)
கல்விச் சேவையில் அதிகூடிய 41 வருட கால சேவையைப் பூர்த்தி செய்த சம்மாந்துறை வலய கணிதபாட ஆசிரிய ஆலோசகர் எம்.எஸ்.எம்.சிறாஜூதீன் தனது 60 வது வயதில் ஓய்வுபெற்றார்.
ஓய்வுபெறும் அவரைப் பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு நேற்று சம்மாந்துறை வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.எம்.சஹதுல் நஜீத் தலைமையில் காரியாலய மண்டபத்தில் நடைபெற்றது.
அவரது அர்ப்பணிப்பான சேவையைப்பாராட்டி பணிப்பாளர் நஜீம் பொன்னாடை போர்த்திக் கௌரவித்தார்.
ஓய்வுபெறும் ஆசிரிய ஆலோசகர் சிறாஜூதீனின் கடந்தகால சேவைகள் பற்றி பிரதிக்கல்விப்பணிப்பாளர் ஏ.எஸ்.அகமட் கியாஸ் கோட்டக்கல்விப்பணிப்பாளர் எம்.ஏ.சபூர்தம்பி உதவிக்கல்விப் பணிப்பாளர்களான ஏ.அப்துல்;.நசீர் எம்.எம்.எம்.ஜௌபர் ஆகியோர் வாழ்த்துரைகளை வழங்கினர்.
2012இல் வலயக்கல்விப்பணிமனையில் கணித பாட ஆசிரிய ஆலோசகராக பதவியுயர்வு பெற்று கடமையாற்றிய அவர் நேற்றுடன் 41வருடகால சேவையைப்பூர்த்தி செய்து சாதனை படைத்துள்ளார்.