Ads Area

கத்தாரிலுள்ள இலங்கையர்கள் 26ம் திகதி தாயகம் அழைத்து வரப்படவுள்ளார்கள்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வௌிநாடுகளில் இருந்து இதுவரை 4,500 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர். நாடு திரும்பும் எதிர்பார்ப்பில் மேலும் 41,000 பேர் வரை வௌிநாடுகளில் தங்கியுள்ளதாக அமைச்சரவை இணை பேச்சாளர், அமைச்சர் ரமேஷ் பத்திரன குறிப்பிட்டார்.

சுற்றுலா விசாவில் வௌிநாடுகளுக்கு சென்றுள்ள 11,000 பேர் நாடு திரும்ப முடியாது சிக்குண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இவர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்கான விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.

அதற்கமைய, பங்களாதேஷில் உள்ள இலங்கையர்களை இன்று அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 26 ஆம் திகதி கட்டாரிலுள்ளவர்களையும் 28 ஆம் திகதி பெலாரஸில் உள்ளவர்களையும் நாட்டிற்கு அழைத்து வரவுள்ளதாக அமைச்சரவை இணை பேச்சாளர் கூறினார்.

அதன் பின்னர், மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து தாயகம் திரும்ப எதிர்பார்த்துள்ளவர்களை அழைத்து வருவதற்கான ஆலோசனைகள் அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ளது.

மாலைத்தீவில் 6770 இலங்கையர்கள் தங்கியுள்ளதாகவும் அவர்களை விரைவில் நாட்டிற்கு அழைத்து வருவதற்கான ஆலோசனைகள் ஜனாதிபதியால் வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சரவை இணை பேச்சாளர், அமைச்சர் ரொமெஷ் பத்திரன குறிப்பிட்டார்.

நாட்டிற்கு அழைத்துவரப்படுவோர் 14 நாட்கள் தனிமைப்படுத்தல் செயற்பாட்டில் ஈடுபடுத்தப்படுவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe