ஐக்கிய மக்கள் சக்தியின் (Samagi Jana Balawegaya - SJB) சம்மாந்துறை தொகுதி அமைப்பாளராக சம்மாந்துறைத் தொகுதியின் முன்னாள் ஐக்கிய தேசிய கட்சி அமைப்பாளர் ஹசன் அலி நியமிக்கப்பட்டுள்ளார்.
சம்மாந்துறைத் தொகுதி அமைப்பாளராக நியமனம் பெற்றுக் கொண்ட ஹசன் அலி அவர்கள் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அம்பாரை மாவட்டத்திலும் சம்மாந்துறைத் தொகுதியிலும் ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) வெற்றியை உறுதி செய்வதற்காக அணிதிரளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.