Ads Area

ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தில் ரைவிங் லைசன்ஸ் (Driving License) பெற இனி இது தேவையில்லை.

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அனைத்து குடியிருப்பாளார்களும் தற்பொழுது தான் பணிபுரியும் நிறுவனத்திடம் இருந்து NOC சான்றிதழ் (No Objection Certificate) பெறாமல் ஓட்டுநர் பயிற்சி வகுப்புகளில் (Driving class) சேரலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய அறிவிப்பை எமிரேட்ஸ் ஓட்டுநர் பயிற்சி நிலையம் (Emirates Driving Institute) கடந்த வாரம் சமூக ஊடகங்களில் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த புதிய விதிமுறையானது ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அனைவருக்கும், குறிப்பாக குறைந்த வருமானம் உடையவர்களுக்கு, நாட்டில் ஓட்டுநர் உரிமம் (Driving License) கிடைக்க செய்து வேலை வாய்ப்புகள் மேம்படுத்துவதை எளிதாக்கும் நோக்கில் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, மருத்துவர்கள், ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள் உட்பட 66 தொழில்முறை பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் மட்டுமே தங்கள் நிறுவனத்திடம் NOC ஐப் பெறாமல் ஓட்டுநர் வகுப்புகளுக்கு விண்ணப்பிக்க அனுமதிக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

குறைந்த வருமானம் கொண்ட தொழிலாளர்களான பணியாளர்கள், வீட்டு உதவியாளர்கள், கடை விற்பனையாளர்கள் மற்றும் ப்ளூ காலர் தொழிலாளர்கள் போன்றவர்களுக்கு தங்கள் நிறுவனத்திடம் இருந்து அனுமதி பெறாமல் ஓட்டுநர் பயிற்சிக்கான வகுப்புகளில் சேர்வதில் இதுவரையிலும் அனுமதிக்கப்படவில்லை. தற்பொழுது, நடைமுறைக்கு வந்துள்ள இந்த ​​புதிய விதிமுறையானது அமீரகத்தில் உள்ள அனைத்து குடியிருப்பாளர்களுக்கும் ஓட்டுநர் உரிமம் பெற சம வாய்ப்புகள் கிடைக்க செய்வதை உறுதி செய்துள்ளது.

இது குறித்து துபாயின் எமிரேட்ஸ் டிரைவிங் இன்ஸ்டிடியூட்டில் (EDI) கஸ்டமர் சர்வீஸ் மற்றும் மார்க்கெட்டிங் இயக்குனர் பாத்திமா ரெய்ஸ் அவர்கள் கூறுகையில், இது மிகவும் சாதகமான நடவடிக்கையாகும், ஏனென்றால் ஓட்டுநர் உரிமங்களைப் பெற விரும்புவோர் எந்தவொரு ஓட்டுநர் நிறுவனத்திலும் எளிதில் ஓட்டுநர் பயிற்சி வகுப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று கூறினார்.

மேலும், குறைந்த வருமானம் கொண்ட பலரும், குறிப்பாக கொரோனாவின் தாக்கத்தால் வேலை இழந்தவர்கள், அமீரகத்தில் மீண்டும் வேலைவாய்ப்பு பெறுவதற்கான சிறந்த ஒரு வாய்ப்பாக இது அமையும். டெலிவரி சர்வீஸ் மற்றும் ஆன்லைன் ஷாப்பிங்கிற்கான தேவை அதிகரிப்பதால் மோட்டார் சைக்கிள் உரிமங்களுக்கான பயிற்சி வகுப்புகளில் சேர்வதற்கு அதிக நபர்கள் ஆர்வமாக உள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஓட்டுநர் பயிற்சி பள்ளிகளில் விண்ணப்பிப்பதற்கு தேவையான ஆவணங்கள்.

01. பாஸ்போர்ட் மற்றும் ரெசிடென்ஸ் விசா நகல் (Copies of passport and residence visa pages)

02. எமிரேட்ஸ் ஐடி மற்றும் அதனுடைய நகல் (Copy and original Emirates ID card)

03. இரண்டு புகைப்படங்கள் (Two photographs)

04. கண் பரிசோதனையின் அறிக்கை (Eye Test Report)

செய்திக்கு நன்றி - www.khaleejtamil.com
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe