கத்தாரில் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக மூடப்பட்ட பள்ளிவாசல்களில் மேலும் 262 பள்ளிவாசல்கள் நாளை முதல் (ஜுலை-01) திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு திறக்கப்படும் பள்ளிவாசல்களில் ஐங்காலத் தொழுகைகைள் கொரோனா பரவும் வழிமுறைகளைத் தடுக்கும் முன்னெச்சரிக்கையுடன் நடைபெறும் என்பதோடு வெள்ளிக்கிழமை ஜும்ஆத் தொழுகைகள் நடைபெறமாட்டாது என்பதாக கத்தார் இஸ்லாமிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சான ”அவ்காப் ” தெரிவித்துள்ளது.
கத்தாரில் கொரோனா அச்சம் காரணமாக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் கட்டம் கட்டமாக தளத்தப்பட்டு வருகின்றன. முதலாம் கட்டம் கடந்த ஜுன் மாதம் 15ம் திகதி ஆரம்பமானது. அதன் போது கத்தாரில் அமைந்துள்ள 500 பள்ளிவாசல்கள் தொழுகைக்காக திறக்கப்பட்டன. ஜுலை 1ம் திகதி (நாளை) முதல் இரண்டாம் கட்டம் ஆரம்பிக்கின்றது. இதில் கத்தார் முழுதும் அமைந்துள்ள பள்ளிவாசல்களில் 262 பள்ளிவாசல்கள் திறக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.