நூருள் ஹுதா உமர்.
சம்மாந்துறை பிரதேச செயலக கலாச்சார அதிகாரசபை ஏற்பாட்டில் வைத்தியர் எம்.எம்.நௌசாத்தின் "பூச்செண்டு போல ஒரு மனிதன்" நூல் வெளியீட்டு விழா இன்று (28) காலை சம்மாந்துறை அப்துல் மஜீத் மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை பணிப்பாளர் வைத்தியர் கு. சுகுணன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். மேலும் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம். ஹனிபா, உதவி பிரதேச செயலாளர் திரு. ஆஷிக், சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் ஆசாத், தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் ரமீஸ் அபுபக்கர், அம்பாறை மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் டி.எம். ரிம்ஸான் உட்பட அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேசங்களையும் சேர்ந்த இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள் என பலரும் சிறப்பு அதிதிகளாக கலந்து கொண்டனர்.
சம்மாந்துறை கலாச்சார அதிகார சபை பணிப்பாளர் மாறன் யூ செயின் நூலை வெளியிட்டு வைக்க நூலாசிரியர் வைத்தியர் எம்.எம். நௌசாத்தின் மனைவி முதல் பிரதியை பெற்று கொண்டார்.