முப்பது வயது என்பது ஆண்களுக்கு திருமணத்திற்கு மட்டுமல்ல, உடல் நலத்தின் மீதும் அதிக கவனம் செலுத்த வேண்டிய வயதாக இருக்கிறது. ஆம், இதற்கு காரணம் நமது இன்றைய வாழ்வியல் முறை மாற்றம் தான். முன்பு நமது அப்பா, தாத்தா போன்றவர்கள் உடலுக்கு திறன் கொடுக்கும் வேலைகளை அதிகம் செய்து வந்தனர்.
முப்பது வயதை தாண்டும் போது ஆண்களுக்கு எலும்புகளின் வலிமை குறைய ஆரம்பிக்கும். அதிலும் முக்கியமாக உட்கார்ந்தே வேலை செய்யும் ஆண்கள். எனவே, தினமும் நடைபயிற்சி, மற்றும் போதிய அளவு உடலுக்கு வேலைகள் தர வேண்டியது அவசியம். புரோஸ்டேட் என்பது ஆண்களின் இனப்பெருக்க பகுதியில் சுரக்கும் ஓர் சுரப்பி. முப்பது வயதுக்கு மேல் ஆண்களுக்கு புரோஸ்டேட் புற்றுநோய் ஏற்படும் அபாயம் இருக்கிறது என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
பெரும்பாலும் ஆண்களுக்கு உடல் பருமன் அதிகரிப்பதே முப்பதுகளில் பயணம் செய்யும் போது தான். முப்பதுகளில் உடல் பருமன் அதிகரிக்காமல் பார்த்துக் கொண்டால், உங்கள் வாழ்நாள் கடைசி வரை நீரிழிவு, மாரடைப்பு போன்ற பெரும் பாலான உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள முடியும்.
உங்கள் உடலில் ஏதேனும் புதிய எதிர்மறை அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவரிடம் பரிசோதனை செய்துக் கொள்ளுங்கள். மருத்துவரை ஏமாற்றுகிறேன் என்று, உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்ள வேண்டாம். இது பின்னாளில் அபாயமாக கூட அமையலாம். உலக அளவில் 15 - 35 வயதுக்குள்ளான ஆண்களுக்கு விதைப்பை புற்றுநோய் அதிகரித்து வருவதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
இதை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால், உடனே சரி செய்து விட முடியும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.