(எம்.என்.எம்.அப்ராஸ்)
அம்பாரை மாவட்டத்தில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முகமாக சமாதானமும் சமூகப்பணியும் அமைப்பின் அனுசரணையில் இயங்கும் கல்முனை நல்லிணக்க மன்றங்களினால் ஏற்பாட்டில்"இணைந்த கரங்கள் தோற்பதில்லை" எனும் தொனிப்பொருளில் நல்லிணக்கத்தால் எதிர்காலத்தை கட்டியெழுப்புவோம் இலங்கையர்களாய் ஒன்றிணைவோம். எனும் நல்லிணக்க வாசகத்தைக் கொண்ட விழிப்புணர்வு பதாகை ஒன்று கல்முனை பொது பஸ் தரிப்பிடத்தில் நேற்று (07) திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டது.
கல்முனை நல்லிணக்கமன்றங்களின் இனைப்பாளர்காளான வேலுப்பிள்ளை தங்கவேல்,எஸ்.எல் அஸீஸ் தலைமையில் இடம்பெற்றது.
மேலும் இதன் போது நிகழ்ச்சி திட்ட ஊத்தியோகத்தர் கே.டி ரோகிணி ,மற்றும் சமாதானமும் சமூகப்பணியும் அமைப்பின் இணைப்பாளர் டி. ராஜேந்திரன்
நல்லிணக்க மன்ற உறுப்பினர்கள் மற்றும் கல்முனை மாநகர சபை உயர் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.