பாலமுனையில் பள்ளிவாசலில் உண்டியலை உடைத்து 20 ஆயிரம் ரூபாய் பணத்தைக் கொள்ளையிட்ட 63 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த பள்ளிவாசலில் பொருத்தப்பட்டிருந்த சீ.சீ.ரீ.வி கெமராவின் உதவியுடனேயே பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரின் வழிகாட்டலில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.