Ads Area

"மசூதி“ என்பதை “பள்ளிவாசல்“ என துாய தமிழில் அழைக்க வேண்டும்" அரசிடம் கோரிக்கை.

மசூதி என்ற பெயரை இனி தூய தமிழில் பள்ளிவாசல் என்று அழைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ் நாட்டு தமிழ் வளர்ச்சி துறை அமைச்சரான மாஃபா பாண்டியராஜன் வசம் இஸ்லாமிய அமைப்பினர் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.


சென்னை மாவட்ட அஹ்லஸ் சுன்னத்வல் ஜமாத், ஜமாத்துல் உலமா சபை செயலாளரும் செங்குன்றத்தில் உள்ள ஆயிஷா மஸ்ஜித் தலைமை இமாமுமான காஜா மொய்னுதீன், தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜனிடம் கோரிக்கை மனு அளித்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது, “தமிழக அரசு வெளியிடும் செய்திக்குறிப்பில் மசூதி என்ற அரபி மொழி பயன்படுத்தப்பட்டு வருகிறது. மஸ்ஜித் என்ற அரபிச் சொல்லில் இருந்து மருவி வந்த மசூதி என்ற சொல்லை இனி பயன்படுத்தாமல் தூய தமிழில் பள்ளிவாசல் என்றே அழைக்க தமிழக முதல்வரை வலியுறுத்தும்படி அமைச்சர்  மாஃபா பாண்டியராஜனிடம் கூறியிருக்கிறோம்”என்றார்.


காஜா மொய்னுதீனின் கோரிக்கை மனுவைப் பெற்றுக் கொண்ட அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், மிகவும் நல்ல கோரிக்கை. நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe