Ads Area

சம்மாந்துறை மல்கம்பிடி பிரதேசத்தில் ரஹ்மத் பவுண்டேஷனின் உதவியில் பொதுக்கிணறு கையளிப்பு.

சம்மாந்துறை மல்கம் பிடி பிரதேசத்தில் கல்முனை ரஹ்மத் பவுண்டேஷனின் மனிதநேயப்பணி வேலைத்திட்டத்தின் கீழ் பொதுக்கிணறு கையளிப்பு.

மிக நீண்ட காலமாக தமது அடிப்படைத்தேவைகளான குடிநீர் பிரச்சினையை கொண்டிருந்த சம்மாந்துறை மல்கம்பிடி பிரதேச குடும்பங்கள் சிலர் முன்வந்து கல்முனை ரஹ்மத் சமூக சேவை அமைப்பிடம் வேண்டிக் கொண்டதற்கிணங்க மிக நீண்ட காலமாக காணப்பட்ட குடிநீர் பற்றாக்குறை விடயம் கண்டறியப்பட்டது. இக் குறைபாட்டினை நிவர்த்தி செய்யும் முகமாக பொது கிணறு வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.


அதன் பலனாக கல்முனை மாநகர சபை பிரதி மேயரும் கல்முனை சமூக சேவை அமைப்பின் தலைவருமான ரஹ்மத் மன்சூர் இடம் வேண்டிக் கொண்டதற்கிணங்க இப் பொதுக் கிணறு வழங்கும் வேலைத்திட்டத்தினை YWMA அமைப்பினரிடம் உடனடியாக தொடர்புகொண்டு இம்மக்களுக்கான குடிநீர் பிரச்சினையை நிவர்த்தி செய்து தருமாறு வேண்டி YWMA அமைப்பின் அனுசரணையில் அம்மக்களின் பிரச்சினையை நிவர்த்தி செய்து  இன்று கல்முனை மாநகரசபை பிரதி மேயரும் கல்முனை சமூக சேவை அமைப்பின் தலைவருமான ரஹ்மத் மன்சூர் அவர்களின் சமூக மனிதநேய பணி வேலைத்திட்டத்தின் கீழ் இப் பொதுக்கிணறினை கையளித்தார்.

மேலும் இந்நிகழ்வில் பல பிரதிநிதிகள் மற்றும் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.










Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe