கொரோனா வைரஸ் தோற்று காரணமாக நிறுத்தப்பட்டிருந்த இலங்கைக்கான சேவையை கட்டார் எயார்வேஸ் மீண்டும் ஆரம்பித்ததுள்ளது. இலங்கையில் இருந்து கட்டாருக்கு பணி நிமிர்த்தம் செல்லவிருந்தவர்களுக்கு இது மகிழ்ச்சியான செய்தியாகும்
இதன் ஊடாக இன்று முதல் -13- இலங்கையில் உள்ளவர்கள் கட்டார் நாட்டிற்கு தமது வேலைவாய்ப்புகளை மீண்டும் தொடங்க பயணிக்க முடியும்
இலங்கையின் அதிகூடிய வருமானத்தினை வழங்கும் அம்சமாக வெளிநாட்டு வேளைவாய்ப்பு விளங்குகின்றது இதற்கான பாதுகாப்பு வழிமுறைகளை கட்டார் தொழில்வழங்கும் நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளது.
இலங்கையிலிருந்து சிறப்பு பயணிகள் விமானங்கள் மூலம் இலங்கையிலுள்ளவர்கள் கத்தாருக்கு பயணிக்க முடியும். இதன் போது புதிதாக தொழில் நிமித்தம் யாருக்கும் பயணிக்க முடியாது. ஏற்கனவே கத்தாரில் பணிபுரிந்து விடுமுறை வந்தவர்கள் (QID Holders) மாத்திரமே பயணிக்க முடியும் என்பதாக தெளிவு படுத்துப்பட்டுள்ளது.
1. கடவுச்சீட்டு
2. கத்தார் ID
3. நுழைவு அனுமதி (Entry permit)
4. ஹோட்டல் தனிமைப்படுத்தலுக்கு முன்பதிவு செய்யப்பட்டதை உறுதிப்படுத்தும் ஆவணம் போன்றவை சமர்ப்பிக்கப்படல் வேண்டும்
என்பதாக கத்தார் அரசாங்கம் தெளிவு படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.