(காரைதீவு சகா)
சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளராக எம்.எஸ்.சஹதுல் நஜீம் மீண்டும் (17) திங்கட்கிழமை கடமையேற்றுள்ளார்.
திங்கள் கிழமை (17) முதல் செயற்படும்படியாக சம்மாந்துறை வலயக்கல்விப்பணிப்பாளராக மீண்டும் எம்.எஸ்.சஹதுல் நஜீம் மீண்டும் கிழக்கு மாகாண கல்வியமைச்சின் செயலாளர் எல்.கே.ஜி.முத்துபண்டாவினால் நியமனம் செய்யப்பட்டிருந்தார்.
குறித்த வலயக்கல்விப் பணிப்பாளர் நஜீம் ஏலவே கல்முனைவலயத்தில் பிரதிக்கல்விப் பணிப்பாளராகவும் சம்மாந்துறை கல்வி வலயத்தின் வலயக்கல்விப் பணிப்பாளராகவும் கடமையாற்றியிருந்தமையும் இவரது காலத்தில் சம்மாந்துறை வலயம் பல சாதனைகளை செய்து பாராட்டுக்களைப் பெற்றிருந்தமையு ம் குறிப்பிடத்தக்கது.