(பாறுக் ஷிஹான்)
முதலை ஒன்றினால் தீண்டப்பட்டு மீட்கப்பட்ட மனிதத் தலை அடையாளம் காணப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டம் சவளக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சொறிக்கல்முனை பகுதியிலுள்ள வழுக்கமடு பாலத்தின் அருகே மாடு மேய்த்துக்கொண்டிருந்தவரை முதலை இழுத்துச்சென்ற நிலையில் தலை மாத்திரம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (9) மாலை கிராம மக்களின் உதவியுடன் பொலிஸாரினால் மீட்கப்பட்டிருந்தது.
பின்னர் தனது உடுதுணிகளை நீர்க்கால்வாய் அருகில் வைத்துவிட்டு கால்வாயில் இறங்கி குளித்துள்ளார். இவ்வேளை குறித்த நபரை கால்வாயில் இருந்த முதலைகள் இழுத்துச்சென்றுள்ளது.
இவ்வாறு இழுத்தச்சென்றவரை காணவில்லை என குடும்பத்தவர்கள் தெரிவித்த நிலையில் கிராமத்தவர்களின் உதவியுடன் தேடுதல் மேற்கொள்ளப்பட்டது.இதன் போது காணாமல் சென்றவரின் ஆடைகள் கால்வாய் கரையோரத்தில் இருந்து மீட்கப்பட்டது.
பின்னர் சுமார் 800 மீற்றர் தொலைவில் குறித்த கால்வாயில் மிதந்து வந்த நிலையில் தலை மீட்கப்பட்டது.பின்னர் மீட்கப்பட்ட தலை கரைக்கு கொண்டுவரப்பட்டு சவளக்கடை பொலிஸாரினால் விசாரணைகள் இடம்பெற்றன.