Ads Area

ராஜபக்ச குடும்பத்தை பழிவாங்குவதற்காவே 19 வது திருத்தம் கொண்டுவரப்பட்டது- நாடாளுமன்றத்தில் பிரதமர்

பத்தொன்பதாவது திருத்தத்தில் காணப்படும் தவறுகளை சரிசெய்வதற்காகவே 20 வது திருத்தத்தை நாடாளுமன்றில் சமர்ப்பித்துள்ளதாக பிரதமர் மகிந்த ராஜபக்ச இன்று நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.

19வது திருத்தம் மூலம் மோசமான நிலைக்கு தள்ளப்பட்ட நாட்டை மீள வலுப்படுத்தவே 20வது திருத்தத்தை கொண்டுவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

20வது திருத்தம் மூலம் அரசாங்கம் விசேட மாற்றங்கள் எதனையும் கொண்டுவரப்போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக்காலத்தின் முதல் 100 நாட்களுக்குள் 19வது திருத்தம் கொண்டுவரப்பட்டது என தெரிவித்துள்ள மகிந்த ராஜபக்ச சிறிசேனவே இதனை விரும்பவில்லை என தெரிவித்துள்ளார்.

ராஜபக்ச குடும்பத்தை பழிவாங்கவே 19வது திருத்தம் கொண்டுவரப்பட்டது எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

எனினும் 19வது திருத்தத்தின் மூலம் தேசிய பாதுகாப்பு பலவீனமடைந்ததன் காரணமாக ராஜபக்ச குடும்பத்தை பழிவாங்கும் முயற்சிகள் தோல்வியடைந்தன என பிரதமர் தெரிவித்துள்ளார்.

நன்றி - தினக்குரல்



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe