(எம்.என்.எம்.அப்ராஸ்)
உள்ளுராட்சி மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சரின் அபிவிருத்தி திட்டங்களுக்கான கிழக்கு மாகாண இணைப்பதிகாரியாக நியமிக்கப்பட்ட ஊடகவியலாளர் றிசாத் ஏ காதர் பொன்னாடைபோர்த்தி, நினைவுச்சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டார் .
விஷ்டம் இளைஞர் கழகத்தின் ஸ்தாபகரான றிசாத் ஏ காதர் பிரதேசத்தில் உள்ள பல்வேறான சமூக, சமய மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் பல்வேறு பணிகளை ஆற்றிவருகின்றார். அரசியலில் மிக நீண்டகாலமாக றியர் அட்மிரல் சரத் வீரசேகரவுடன் பயணம் செய்து இப்பிராந்தியத்தில் பல்வேறு சமூகநலப் பணிகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அந்தவகையில் அமைச்சரினால் கிழக்கு மக்களை கெளரவப்படுத்தும் வகையிலே குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பதவியின் ஊடாக இப்பிராந்தியத்தில் இன்னும் பல பணிகளை ஆற்றவேண்டும் என எமது விஷ்டம் இளைஞர் கழகம் ஆலோசனை வழங்குகின்றது.
அட்டாளைச்சேனை விஸ்டம் இளைஞர் கழகத்தின் தலைவர் ஐ. முகம்மட் வாஜித் தலமையிலான குழுவினரினால் இணைப்பாளரின் இல்லத்தில் வைத்து இக்கெளரவம் வழங்கிவைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.