Ads Area

இந்தியாவில் 80 லட்சத்தை நெருங்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு! ஒரே நாளில் 508 பேர் உயிரிழப்பு!

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் புள்ளி விவரங்கள் படி, இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கையானது 79,90,322 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை 72,59,509 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 6,10,803 பேர் நாடு முழுவதும் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 1,20,010 பேர் இந்தியாவில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் புதிதாக 43,893 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 58,439 பேர் இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 508 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் சதவீதம் 90.85 ஆகவும், இறப்பு சதவீதம் 1.50 ஆகவும் உள்ளது. இந்தியாவில் இதுவரை மொத்தம் 10,54,87,680 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. நேற்று மட்டும் 10,66,786 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதாக ICMR தெரிவித்துள்ளது.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe