பள்ளிவாசல்களை மூடுகின்ற விவகாரம் முதல்வரினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானமல்ல..!
கல்முனையில் பள்ளிவாசல்களை மூடுகின்ற தீர்மானம் கெளரவ மாநகர முதல்வரினால் மேற்கொள்ளப்படவில்லை.
அது கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் பொருட்டு கல்முனைப் பிராந்திய சுகாதாரத்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் என்பதுடன் கல்முனை பிரதேச செயலாளரின் அறிவித்தலின் பேரில் பள்ளிவாசல்கள் சம்மேளனம் மேற்கொண்ட தீர்மானம் எனவும் அறியக் கிடைக்கிறது.
இத்தீர்மானத்திற்கும் மாநகர முதல்வருக்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை.
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக சிலர் வேண்டுமென்றே இவ்வாறான விடயங்களுடன் முதல்வரை சம்மந்தப்படுத்தி, வதந்திகளைப் பரப்பியும் விமர்சனங்களை மேற்கொண்டும் மக்கள் மத்தியில் குழப்பங்களை ஏற்படுத்த முனைவது கண்டிக்கத்தக்கதாகும்.
மாநகர முதல்வரினால் அவ்வப்போது மேற்கொள்ளப்படுகின்ற தீர்மானங்கள், அறிவுறுத்தல்கள் மற்றும் முதல்வருடன் தொடர்புடைய செய்திகள் யாவும் முதல்வரின் ஊடகப் பிரிவினால் பத்திரிகைகள், இலத்திரனியல் ஊடகங்கள் மற்றும் முதல்வரின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கம் என்பவற்றில் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டு வருகின்றன என்பதை அறியத் தருகின்றோம்.
எனவே மக்கள் வீண் வதந்திகளை நம்பி குழப்பமடையாமல், உண்மையான தகவல்களை மாத்திரம் கவனத்தில் கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.
முதல்வர் ஊடகப் பிரிவு