Ads Area

கத்தாரில் இலங்கையர்களின் தொடர் மரணங்களும், அவற்றுக்கான காரணங்களும்!

மரணம் இறைவனின் தீர்ப்பு என்பதில் மாற்றுக்கருத்து இல்லை, என்றாலும் அண்மைக்காலமாக கத்தாரில் அதிகரித்து வரும் மரணங்கள் தொடர்பாக பலரும் அச்சம் கொண்டிருக்கும் நிலையில் சமூக பொறுப்பு வாய்ந்த அமைப்புக்கள் இதனை ஆய்வு செய்து அறிவு பூர்வமான சமூக விழிப்புணர்வு காலத்தின் தேவையாகும்.

1) கத்தாரில் ஏனைய சமூகங்களுடன் ஒப்பிடும் போது இலங்கையர்களின் மரணம் அதிகமாக உள்ளது ஏன்?

2) மரணிப்பவர்களின் அதிகமானவர்கள் 40க்கும் 50க்கும் இடைப்பட்ட நாட்டில் குடும்பத்தை விட்டு பிரிந்து வாழும் சகோதரர்கள்?

3) அதிகமான மரணங்கள் மாரடைப்பு காரணமாகவே நடக்கிறது?

அதிகமாக பேசும்பொருளாக உள்ள காரணங்கள்

1) உச்ச மன அழுத்தம்

2) வேலைவாய்ப்பு பிரச்சினை

3) சம்பள குறைப்பு

4) நாட்டுக்கு போகமுடியாத நிலை

5) உணவுப் பழக்கம்

6)மலிவாக கிடைக்கும் ஆரோக்கியமற்ற உணவு பாவனை

7) Restaurant களில் சுவையை மற்றும் கருத்தில் கொண்டு செய்யப்படும் உணவு இந்த நாட்டின் பழக்க வளக்கத்துக்கு ஔவாமை

8) சட்டவிரோத உணவு விற்பனைகள்

9) நோய்களுக்கு வைத்தியசாலையை நாடுவதை சிரமமாக கருதுவது

10) உடற்ப்பயிற்சி இல்லாமை

11) மது, புகைத்தல் மற்றும் போதைப்பொருள் பாவனை

12) QR 100 செலவை கருத்தில் கொண்டு Health Card எடுப்பதில்லை

13) நோய்க்கு நாட்டில் இருந்து மருந்துகளை கொண்டுவந்து தொடர்ச்சியாக வைத்தியர் கண்காணிப்பு இல்லாமல் பாவித்தல்

14) மருத்துவ ஆலோசனையில் அதிகமானவர்கள் பரிசோதனையை விரும்புவது இல்லை, அவசர சிகிச்சையுடன் விட்டுவிடுவது

போன்ற பல தவறுகளை செய்து வருகிறார்கள்.

வாழ்க்கையை வளமாக்க வந்தவர்கள் வாழ்க்கையை இல்லாமல் ஆக்குவது பற்றி சிந்திப்பது இல்லை.

வாழ்வதற்காக எங்கள் நேரத்தை ஒதுக்குவோமாக.

நன்றி: Original Author



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe