இலவச Wi-Fi ஹாட்ஸ்பாட்களை (hotspots) நாடு முழுவதும் விரிவுபடுத்தும் திட்டத்தை சவுதி அரேபியா அறிமுகப்படுத்தியுள்ளது. மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக அறுபதாயிரம் புதிய Wi-Fi ஹாட்ஸ்பாட்கள் நிறுவப்படவுள்ளது.
தற்போது நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்கள் போன்ற முக்கிய இடங்களில் Wi-Fi கிடைக்கிறது. தற்போது அதனை நாடு தழுவிய அளவில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் அறுபதாயிரம் புதிய Wi-Fi ஹாட்ஸ்பாட்கள் அமைக்கப்படும். இந்த திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம், மக்கா மற்றும் மதீனா புனிதத் தலங்கள், மருத்துவமனைகள், வணிக வளாகங்கள், பொது இடங்கள், பூங்காக்கள், முக்கிய நகரங்கள் போன்றவற்றில் Wi-Fi மூலம் இலவச இணைய சேவை கிடைக்கும்.
இத் திட்டத்தின் நோக்கம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதாகும் இந்த திட்டம் நாட்டில் இயங்கும் தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களுடன் இணைந்து செயல்படுத்தப்படவிருக்கிறது என சவுதி அரேபிய தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பப் பிரிவு தெரிவித்துள்ளது.
செய்தி மூலம் - https://www.arabnews.com