Ads Area

கல்முனை மற்றும் சாய்ந்தமருது பகுதியில் காட்டு யானைகள் அட்டகாசம் ; மதில்கள் மரங்களும் சேதம்.

 (எம்.என்.எம்.அப்ராஸ்)

அம்பாரை மாவட்டம் கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட கல்முனை மற்றும் சாய்ந்தருது பகுதியில் காட்டுயானைகள் வருகை தந்து சொத்துக்களுக்கு சேதமேற்படுத்தியுள்ளது.

(12) அதிகாலை வேளையில் சாய்ந்தமருது வொலிவோரியன் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள சாய்ந்தமருது- கமநலச் சேவை நிலையத்தின் மதில்களை உடைத்து , அங்கிருந்த மரக்கன்றுகளையும், .

காட்டு யானைகள் சேதப்படுத்தியுள்ளதுடன் இதேவேளை அதே தினம் (12 ) கல்முனை பகுதியில் அஷ்ரப் ஞபகார்த்த வைத்தியசாலை அருகில் உள்ள வீடொன்றின் மதிலை உடைத்து அங்கு நடப்பட்டிருந்து சுமார் 50க்கு மேற்பட்ட வாழை மரங்களை சேதப்படுத்தி உள்ளது.

அண்மை காலமாக அம்பாறை மாவட்டத்தின் கரையோர பகுதிகளுக்கு காட்டுயானைகள்  கூட்டமாக வருகை தந்த வண்ணம் உள்ளதுடன் யானைகளின் அட்டகாசம் அதிகரித்துக் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இரவு நேரங்களில் காட்டு யானைகள் கூட்டமாக மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு வருவதனால் பொது மக்களுக்கு அச்ச நிலை உருவாகியுள்ளது

இவ்விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொது மக்கள் கோருகின்றனர்.

இதேவேளை குறித்த விடயமறிந்த வன ஜீவராசிகள் வளங்கள் இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்க அவர்களின் இணைப்பாளர் எம்.வை.எம். நிப்ராஸ் அவர்கள் சம்பவம் இடம்பெற்ற இடங்களுக்கு நேரடியாக விஜயம் செய்து சேத நிலமைகளை பார்வையிட்டதுடன் இது தொடர்பாக உடனடியாக அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றதுடன் தேவையான நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.







Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe