இலங்கையில் தினமும் வீதி விபத்துக்களால் 5 தொடக்கம் 10 பேர் வரை உயிரிழக்கின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். ஊடகங்களிடம் நேற்று கருத்து வெளியிட்டபோதே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
வருடாந்தம் வீதி விபத்துக்களால் 3 ஆயிரம் பேர் மரணிக்கின்றனர். மேலும், வீதி விபத்துக்களால் 15 ஆயிரம் பேர் அங்கவீனர்களாகின்றனர். அத்துடன் 20ஆயிரம் பேரும் காயமடைகின்றனர் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.