பிரதமர் கௌரவ மகிந்த ராஜபக்ஷ அவர்களது 75வது பிறந்த நாளுக்கு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ இவ்வாறு தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.
சிறு பராயம் முதற்கொண்டு எனக்கு வழிகாட்டிய பாசமிகு அண்ணனே...
நீண்ட போரினால் சிதைவுற்றுத் திண்டாடிய நாட்டினை மீட்டெடுத்து, அமைதியை நிலைநாட்டிய இணையற்ற தலைவனே...
60 ஆண்டுகளாக பல்முனைப் பேரழிவுகளை எதிர்கொண்டு நின்ற எமது மக்களுக்கு - அபிவிருத்தி மேம்பாட்டுக்கான விடியற் பாதையைத் திறந்த - தீர்க்க தரிசனம் கொண்ட வழிகாட்டியே...
இன, மத, மொழி வேறுபாடுகளற்று - இலட்சோப இலட்சம் இலங்கை குடிமக்களின் மனங்களில் நிறைத்திருக்கும் ஒப்பற்ற மாமனிதனே...
உங்களுக்கு எனது 75 வது பிறந்தநாள் வாழ்த்துகள்!
இன்னும் பல்லாண்டு காலத்திற்கு - எமது தாய்த் திரு நாட்டிற்கும் எனக்கும் சிறப்புர வழிகாட்டுவீராக.