Ads Area

சம்மாந்துறை வளத்தாப்பிட்டி கரங்காவட்டை காணி உரிமையாளர்களை சந்தித்த பா.உ. எஸ்.எம்.எம் முஷாரப்.

வளத்தாப்பிட்டி கரங்காவட்டை காணி உரிமையாளர்களை உடனடியாக சந்தித்தார் திகாடுமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம் முஷாரப்.

சம்மாந்துறை வளத்தாப்பிட்டி கரங்கா வட்டையில் பூர்விகமாக வேளாண்மை செய்து வந்த விவசாயிகள் உரிய ஆவணங்கள் இருந்தும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒரு சிலரால் அத்துமீறி வேளாண்மை செய்யப்பட்டு வரும் வேளையில் மீண்டும் நேற்று முன்தினம் ஏற்கனவே விதைக்கப்பட்டு பயிர் நிலையில் இருந்த வயல் நிலங்களை உழவி நாசகாரம் செய்து விவசாயிகளை அச்சுறுத்துவதனை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் முஷரப் அவர்களின் கவனத்துக்கு சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ உறுப்பினர் ஏ.சீ.எம். சஹீல் அவர்கள் கொண்டு வந்ததனையடுத்து நேற்று 08.11.2020 உடனடியாக பாதிக்கப்பட்ட விவசாயிகளை சந்தித்து பிரச்சினைகளை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் கேட்டறிந்து கொண்டார்.






Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe