ஏ.எச்.எம். றிகாஸ்
சாய்ந்தமருது வைத்தியசாலை வீதியில் தோணாவுக்கு மேலாக அமையப்பெற்றுள்ள பழமை வாய்ந்த பாலம் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.
மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் சுமார் ஐந்து கோடி ரூபா நிதி ஒதுக்கீட்டில் மேற்படி பாலம் அமையவுள்ள இடத்திற்கு இன்று கள விஜயம் ஒன்றை மேற்கொண்ட அமைச்சின் அதிகாரிகள் உட்பட வீதி அபிவிருத்தி திணைக்கள பொறியியலாளர் மற்றும் உத்தியோகத்தர்கள் பாலம் அமைவதற்கான சாத்தியவளங்கள் குறித்து ஆராய்ந்தனர்.
சுனாமியால் பாதிக்கப்பட்ட நிலையில் வாகனப் போக்குவரத்திற்கு பொருத்தமற்றதாக காணப்பட்ட இப்பாலத்தின் அவல நிலையை கருத்திற்கொண்ட சாய்ந்தமருது முன்னாள் பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் அவர்கள் இது குறித்து பல்வேறு மட்டங்களிலும் முயற்சி செய்து வந்தார்.
அத்துடன் இப்பாலத்தை அகற்றிவிட்டு போக்குவரத்திற்கு பொருத்தமான நவீன பாலமொன்றை நிர்மாணித்து தருமாறு அமைச்சின் உயர் அதிகாரிகளுக்கு தொடர்ந்தும் வலியுறுத்தி வந்த நிலையில் மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் பணிப்புரையின் பேரில் இந்த கள விஜயம் அமைந்திருந்தது.
இதன்போது, சாய்ந்தமருது முன்னாள் பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் மற்றும் கல்முனை மாநகர சபை உறுப்பினர் எம்.வை.எம்.ஜஹ்பர் மற்றும் பிரதேச பொதுமக்களும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.