சம்மாந்துறை அன்சார்.
நோயாளர்களை பார்வையிட பெரும்பாலும் நாம் வைத்தியசாலைக்கு அல்லது அவர்களது வீடுகளுக்குச் செல்லும் போது நாம் எல்லோரும் எப்போது பார்த்தாலும் உப்பு பிஸ்கட் பக்கெட், சீனி, அங்கர் பால்மா, வாழைப்பழம், அல்லது ஏனைய பழவகை என இவைகளை வாங்கிக் கொண்டு போய் கொடுப்பதுதான் வழமை ஆனால் இவை எல்லாவற்றையும் விட அவர்களுக்கு முக்கிய தேவையாக இருக்கும் ஒன்றைப் பற்றி நாம் அவ்வளவாக சிந்திப்பதில்லை.
ஒருவர் நோயுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தால், அல்லது வீட்டிலே தங்கியிருந்தால் அவரது நோய்க்கான மருந்துகள், மாத்திரைகள், போக்குவரத்துகள் என அவருக்கு பல செலவுகள் இருக்கும் அந்த செலவுகளை நிபர்த்தி செய்ய சில நேரம் அவர் திண்டாடுவார், அவரது பொருளாதார வசதி அவ்வளவாக இடம் கொடுக்காதும் போகலாம் அத்தகையவர்களை பார்வையிட நாம் வைத்தியசாலை செல்லும் போது உப்பு பிஸ்கட் பக்கெட், சீனி, அங்கர் பால்மா, வாழைப்பழம், அல்லது ஏனைய பழவகை என வாங்கிக் கொண்டு செல்லாமல் அவர்களது தேவையினை நிபர்த்திக்கும் அளவுக்கான பணத்தினை பூங் கொத்தோடு சேர்த்து ஏன் அன்பளிப்புச் செய்யக் கூடாது..??? இவ்வாறு பணம் அன்பளிப்புச் செய்யும் போது அது அவர்களுக்கு மிகவும் ஆறுதலாகவும் மனதிற்கு இதமாகவும் அமையும் அல்லவா...??
தங்களை பார்வையிட வருபவர்களிடமிருந்து நோயாளிகள் எதுவும் எதிர்பார்ப்பதில்லை அவர்கள் எதிர்பார்ப்பதெல்லாம் மனதிற்கு ஆறுதலான நாலு வார்த்தைகளையே அன்றி வேறில்லை இருந்தாலும் நாம் செல்லும் போது அழகான-வண்ணமயமான பூங்கொத்துக்களைக்களையும் அதனோடு சேர்த்து முடியுமான தொகைப் பணத்தினையும் கவரிலே வைத்துக் கொண்டு அவர்களைப் பார்வையிடச் சென்றால் பூங்கொத்துக்கள் அவர்களது மனதிற்கு இதமளிக்கும், பண அன்பளிப்பு அவர்களுக்கு பிரயோசனமளிக்கும்.
நமது மனம் சோர்வான நிலையடையும் போது பூங்கொத்துகளைப் பார்த்தால் அல்லது பூந்தோட்டங்களைப் பார்த்தால் நமக்கு கொஞ்சம் இதமான உணர்வு ஏற்படுகிறது அல்லவா அதே போல்தான் நோயுற்ற ஒருவரை பூங்கொத்தோடு சென்று பார்வையிடும் போது அவர்களது மனதிலும் இதமான உணர்வு ஏற்படும்.
பூங்கொத்துக்கள் கிடைக்காத பட்சத்தில் உங்களுக்கு முடியுமான தொகையினை ஒரு கவரிலே வைத்து அதனை அவர்களுக்கு அன்பளிப்பாக வழங்குங்கள்.
சவுதி அரேபியா போன்ற நாடுகளில் வைத்தியசாலையில் நோயாளிகளைப் பார்வையிடச் செல்லும் போது பெரும்பாலானவர்கள் பூங்கொத்துக்களோடும் பண அன்பளிப்புக்களோடுமே பெரும்பாலும் செல்வார்கள் இந்த நல்ல பழக்கத்தினை நாமும் பின்பற்றலாமே.