தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படாத பிரதேசங்களில் இடம்பெறும் திருமணங்கள் மற்றும் மரண சடங்குகளுக்கு வரும் நபர்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்த சுகாதார அமைச்சு ஆலோசனை வழங்கியுள்ளது.
ஊரடங்கு சட்டம் அமுல்டுத்தப்படாத பிரதேசங்களில் செயற்பாடுகளை மட்டுப்படுத்த வேண்டிய முறை தொடர்பில் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டி அமைப்பில் இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதற்கமைய குறித்த பிரதேசங்களில் திருமண நிகழ்வுகளில் கலந்து கொள்ள வேண்டியவர்களின் அதிகபட்ச எண்ணிக்கை 50 ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
மரண வீட்டில் கலந்து கொள்ள வேண்டியவர்களின் அதிக பட்ச எண்ணிக்கை 25 ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
ஆலயங்கள், விகாரைகள், தேவாலயங்கள் மற்றும் பள்ளிவாசல்களில் பொது மக்கள் ஒன்று கூடும் செயற்பாடுகள் அல்லது கூட்டங்கள் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை.
அவ்வாறான இடங்களில் எந்தவொரு சந்தர்ப்பங்களிலும் இருக்க வேண்டிய பக்தர்களின் எண்ணிக்கை அதிக பட்சம் 25 ஆக காணப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.