Ads Area

மனைவியை பெற்றோல் ஊற்றி கொலை செய்த கணவருக்கு மரண தண்டனை விதித்த நீதிபதி இளஞ்செழியன்.

காதலர் தினத்தன்று தனது மனைவியை பெற்றோல் ஊற்றி கொலை செய்த ஒருவருக்கு திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்க வாசகர் இளஞ்செழியன் மரண தண்டனை விதித்து இன்று (18) தீர்ப்பளித்தார்.

38/1, பாடசாலை மாவத்தை, ஆண்டாம் குளம், திருகோணமலை பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய கெந்த கேவாகே அனுர இசாந்த என்பவருக்கே இவ்வாறு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2018.02.14 ஆம் திகதி கந்தளாய் அக்போபுர பகுதியைச் சேர்ந்த குலசேகர முதியன்சாலாகே ரேணுகா எனும் தனது மனைவியை காதலர் தினத்தன்று பெற்றோல் ஊற்றி தீ வைத்து கொலை செய்த குற்றத்திற்கெதிராக கெந்த கேவாகே அனுர இசாந்த என்ற எதிரிக்கு எதிராக சட்டமா அதிபரினால் 2019.04.12 ஆம் திகதி திருகோணமலை மேல் நீதிமன்றில் மரணத்தை விளைவித்த குற்றச்சாட்டின் இலங்கை தண்டனை சட்டக்கோவை கொலை குற்றச்சாட்டின் கீழ் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

அவ் வழக்கு தொடர்பான இரு தரப்பு வழக்கு விசாரணைகளும், அதற்கான தொகுப்புரைகளும் நிறைவு செய்யப்பட்டதையடுத்து இன்றைய தினம் குறித்த வழக்குக்கான தீர்ப்பு திறந்த நீதிமன்றில் எதிரி மற்றும் அரச சட்டத்தரணி, முன்னிலையில் வாசித்து காண்பிக்கப்பட்டு எதிரி குறித்த குற்றச்சாட்டுக்கு குற்றவாளியாக இணங்காணப்பட்டதையடுத்து எதிரிக்கு மரணதண்டனை விதித்து திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசர் இளஞ்செழியன் தீர்ப்பளித்தார்.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe