சம்மாந்துறை அன்சார்.
சவுதி அரேபியாவில் விரைவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளதாக சில இணையத்தளங்களும், முகநுால் பக்கங்களிலும் செய்திகள் பரவுகின்றன இது தொடர்பான உண்மைத்தன்மை இதோ.
முழு உலகத்தையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தாக்கம் பல நாடுகளில் படிப்படியாக குறைந்து வருகின்ற நிலையில் சில நாடுகளில் அதன் தாக்கம் மீண்டும் கோரத்தாண்டவம் ஆட ஆரம்பித்துள்ளது இந் நிலையில் சவுதி அரேபியாவிலும் கொரோனா தாக்கத்தின் இரண்டாம் அலை ஆரம்பித்துள்ளதாகவும் அதனால் சவுதியில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்டுவதற்கான வாய்ப்புள்ளதாகவும் சில செய்திகள் பரவி வருகின்றன.
இது தொடர்பில் சவுதி அரசாங்கம் தெரிவித்துள்ளதாவது,
சவுதி அரேபியாவில் தற்போது கொரோனாவின் தாக்கம் கட்டுப்பாட்டிற்குல் கொண்டு வரப்பட்டுள்ளது சில நாடுகளில் கொரோனாவின் இரண்டாம் அலை ஏற்படுவதற்கு காரணம் அந்த நாடுகள் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை சரியாக கடைப்பிடிக்காமையாகும் ஆனால் சவுதி அரேபியாவில் கொரோனா பரவலின் வேகம் தற்போது கட்டுப்பாட்டிற்குல் கொண்டு வரப்பட்டுள்ளது.
தற்போதைய சூழ்நிலையில் சவுதியில் மீண்டும் ஊரடங்ககு உத்தரவுகள் பிறப்பிப்பதற்கான அவசியம் எதுவும் இல்லை இருந்த போதும் கொரோனா பரவலின் இரண்டாம் அலை அதிகரிக்கும் பட்சத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படலாம்.
ஆகவே சவுதியில் உள்ள குடி மக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை சரியாக கடைப்பிடிக்க வேண்டும் அதனை மீறுவோர் தொடர்பில் உடனுக்குடன் முறைப்பாடுகளையும் தெரிவிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.