சிக்னல்களின் பிச்சையெடுக்கும் யாசகர்களுக்கு யாசகம் வழங்குவோர்கள் மீது சட்டநடவடிக்கை மேற் கொள்ளப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹனா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வீதி சிக்னல்களில் பிச்சையெடுப்போருக்கு யாசகம் வழங்கும் சாரதிகள் மற்றும் பாதசாரிகளுக்கு எதிராக கடுமையான சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
சிலர் அடிப்படைச் சம்பளத்துடன் பணிகளில் ஈடுபட்டுள்ள போதும் பிச்சையெடுத்து வருகின்றனர். இத்தகையவர்களை அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கெதிராகவும் சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
newswire