உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொள்ளை நோய் உலக அளவில் பாரிய அரசியல் சமூக பொருளாதார நெருக்கடிகளை ஏற்படுத்தியிருக்கின்றது, அந்த வகையில் எமது தேசமும் விதிவிலக்கு அல்ல.
குறிப்பாக இலங்கை முஸ்லிம்கள் எதிர்கொண்டுள்ள பிரதான பிரச்சினை கொவிட் 19 நோய் தொற்றால் வபாஃத் ஆகும் ஜனாஸாக்களை பலவந்தமாக எரிக்கும் நடைமுறையாகும்.
உயிர்த்த ஞாயிரு தாக்குதலுக்கு பின்னரான களநிலவரங்களை கருத்தில் கொண்டு குறிப்பிட்ட விவகாரத்தை ஒரு முஸ்லிம்களுக்கு மட்டுமான விவகாரமாக அன்றி ஒரு தேசியப் பிரச்சினையாகவும் மருத்துவ விஞ்ஞான பிரச்சினையாகவும் கையாள்வதில் முஸ்லிம் சிவில் சன்மார்க்க அரசியல் தலைமைகள் கவனம் செலுத்தின.
குறித்த விவகாரம் மூலம் முஸ்லிம் சமூகம் பலிக்கடாவாக்கப்பட்டாலும் அதன்பின்னால் பாரிய அரசியல் நிகழ்ச்சி நிரல் இருப்பதாக கருதுகிற ஏனைய சமூகங்களும் அவ்வாறான ஆத்திரமூட்டல்களுக்கு பழியாகிவிட கூடாதென முஸ்லிம் சமூகத்திடம் எதிர்பார்க்கிறார்கள்.
அதேவேளை ஒவ்வொரு நாளும் ஆங்காங்கே இடம்பெறுகின்ற நிகழ்வுகள் காழ்ப்புணர்வு பரப்புரைகளில் கவனத்தை குவித்துள்ள ஊடக ஊதுகுழல்களுக்கு அதிகரித்த சந்தர்ப்பங்களை ஏபடுத்திக் கொடுக்கின்றன.
ஏட்டிக்குப் போட்டியாக இனமத வெறி சக்திகள் களமிறக்கப்படும் சாத்தியக்கூறுகள் அதிகமிருப்பதால் நாடுமுழுவதிலும் முஸ்லிம்கள் விழிப்பாகவும் சமயோசிதமாகவும் பூரண தலைமைத்துவக் கட்டுக் கோப்புடன் நடந்து கொள்வதே தற்போதைய நிலையில் அவசியமாகும்.
எதிரும் புதிருமாக நிலைமை மோசமடையும் பட்சத்தில் தீர்வு முயற்சிகள் கிடப்பில் பௌடப்படுவதற்கான சாதாதியப்பாடுகளும் அதிகமிருக்கின்றன.