ஐ.எல்.எம் நாஸிம்
டெங்கை ஒழிப்போம் நாட்டை காப்போம். எனும் வேலைத்திட்டத்தின் கீழ் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர் யு.எல்.எம் நபீல் அவர்களின் வேண்டுகோளுக்கமைய (RISO) சம்மாந்துறை றஹ்மாஸ் இஸ்லாமிய சமூக சேவை அமைப்பின் ஏற்பாட்டில் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை வளாகத்தில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் நேற்றுமுன்தினம் முன்னெடுக்கப்பட்டது.
இந்நிகழ்வில் வைத்திய சாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள், அமைப்பின் அங்கத்தவர்கள் கலந்து கொண்டு டெங்கு ஒழிப்பு சிரமதானப்பணிகளை மேற்கொண்டிருந்தனர்.