Ads Area

கொரோனா நெருக்கடியை எதிர்கொண்டுள்ள அக்கறைப்பற்று மக்களுக்கு நிவாரணப்பொதிகள் வழங்கி வைப்பு.

தகவல் - சபூர் ஆதம்.

கொவிட் 19 நெருக்கடியை எதிர்கொண்டுள்ள அக்கறைப்பற்று உறவுகளுக்கு உதவும் நோக்கில் அக்கரைப்பற்று அனைத்து  பள்ளிவாயல்கள் சம்மேளனம் மற்றும் ஜம்மியத்துல் உலமா, மாநகரசபை இணைந்து பைத்துத் தகாபுல், APEC International, அந்நூர், அக்கரைப்பற்று ஜமாஅத்தே இஸ்லாமி, பைத்துஸ் ஸகாத், Royal Youths, Iconic Youths, Ar Raheemiya Sports Club போன்ற அனைத்து சமூக அமைப்புகளையும் உள்ளடக்கி ஸ்தாபிக்கப்பட்ட அக்கரைப்பற்று அனர்த்த முகாமைத்துவப் பிரிவின்  ( Disaster Management Unit) நிவாரணப்பணிகள் இன்று (9.12.2020) ஆரம்பித்து வைக்கப்பட்டன.!

அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தின் 7000 குடும்பங்களுக்கான கொரோனா நிவாரண உதவித் திட்டத்தில் உள்வாங்கப்படாத ஏறத்தாழ 2500 குடும்பங்கள் அடையாளம் காணப்பட்டு,  இதில் முதல் கட்டமாக அக்கரைப்பற்று நகர்ப்பிரிவு -03 மீராநகரில் பிரதேச செயலகத்தினால் பொதிகள் வழங்கப்படாத, மிகவும் கஷ்டப்படுகின்ற பயனாளிகளை இனம் கண்டு 209 பொதிகளையும், மற்றும் அக்கரைப்பற்று நகர்ப்பிரிவு -05,  பத்ர் நகரிலுள்ள பயனாளர்களுக்கு 222  நிவாரணபொதிகளும் இன்று  வழங்கி வைக்கப்பட்டன.!

பள்ளிவாயல் நிர்வாக சபை மற்றும் அக்கரைப்பற்று பிரதேச செயலாளரின் உதவியுடன் கீழ் குறித்த பிரிவுக்கு பொறுப்பான கிராம சேவகர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஊடாக பயனாளிகள் தெரிவு இடம்பெற்றதும், நிவாரண விநியோகம் மேற்கொள்ளப்பட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது.!

அத்துடன் தொடர்ந்தும் மேற்படி நிவாரண பணிகள் இடம்பெற வேண்டிய தேவை உள்ளதால் மனமுவந்து  உதவ விரும்புவோர் அவசரமாக உங்களுடைய உதவிகளை கீழ்வரும் வங்கிக் கணக்குகளுக்கு வைப்பிலிடுமாறு வேண்டுகின்றோம்.!


M.B.A. Hameed (Secretary of AMF)

A/C 111154261019

Sampath Bank - Akkaraipattu


A.G. Abdul Rauf 

(President - AKP Jamathe e Islami)

A/C 8002733810

Commercial Bank - Akkaraipattu


Iconic Youth

A/C 8172009741

Commercial Bank - Akkaraipattu


Royal Youth

A/C 8172006600

Commercial Bank - Akkaraipattu


APEC International

A/C 063100100058869

People's Bank - Akkaraipattu


ஊடகப்பிரிவு,

அக்கரைப்பற்று அனர்த்த முகாமைத்துவப் பிரிவு







Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe