Ads Area

கொவிட் நோயாளிகளது கழிவுகளால் நிலக்கீழ் நீர் மாசடைவதாக பாலமுனை மக்கள் சார்பில் வழக்குத் தாக்கல்....!

பாலமுனை கொவிட் தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் வைத்தியசாலையின் நோயாளிகளது கழிவுகளால் நிலக்கீழ் நீர் மாசடைந்து எமது பிரதேசத்தில் கொறோணா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தடுக்க மன்றின் கட்டளையைப் பெறுவதற்கு இன்று அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வழக்கில் உள்ள நியாயத்தை அறிந்த நீதிமன்றம் இதன் பிரதிவாதிகளை எதிர்வரும் ஜனவரி 04ம் திகதி மன்றிற்கு அழைத்து விசாரிக்க அழைப்பாணை விடுக்குமாறு கட்டளை பிறப்பித்ததுள்ளது. பாலமுனை  ஊர்மக்கள் சார்பில் இவ்வழக்கை சட்டத்தரணி எம்.ஏ.அன்ஸில், ஏ.ஏல்.அலியார், எஸ். ஆபிதீன். ஏ.எல்.ஹஸ்மீர், பி.எம்.ஹுஸைர் அடங்கிய ஐந்து பேர் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.

இவ்வழக்கில் பாலமுனை  ஊர்மக்கள் சார்பில் குரல்கள் இயக்கத்தின் (Voice Movement) சட்டத்தரணிகளான சிரேஸ்ட சட்டத்தரணி எம்.எம்.பஹீஜ், எம்.எம். றத்தீப் அகமட் மற்றும் யு.எல்.வஸீம் ஆகியோர் வாதத்தை முன்வைத்தனர் என சட்டத்தரணி எம்.ஏ.அன்ஸில் தெரிவித்தார்.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe