பிரிட்டனிலிருந்து வரும் விமானங்கள் நாளை (23) முதல் இலங்கையில் தரையிறங்க அனுமதிக்கப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை அதிகாலை 02.00 மணி முதல் பிரிட்டனில் இருந்து வரும் விமானங்கள் இலங்கைக்குள் செல்ல அனுமதிக்கப்படாது என்று இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து ஆணையகம் தெரிவித்துள்ளது.
பிரிட்டன் மற்றும் ஐரோப்பாவில் COVID-19 இன் புதிய ரக வைரஸ் தோன்றி அந் நாட்டில் வேகமாக பரவி வரும் நிலையிலேயே இலங்கையில் இவ்வாறான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் எதிர் வரும் 26ம் திகதி முதல் விமான நிலையங்களை சுற்றுலா பயணிகளுக்காக திறக்கவுள்ளமை குறிப்பிடத் தக்கதாகும்.
அசல் செய்தி - http://www.newswire.lk
தமிழ் - சம்மாந்துறை அன்சார்.