தற்பொழுது வரை GCC நாட்டவர்களுக்கு மட்டுமே விசா இல்லாமல் ஓமானில் நுழைய அந்நாட்டு அரசு அனுமதி வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது விலக்கு அளிக்கப்பட்டுள்ள நாடுகளில் இருந்து ஓமானுக்கு வருகை தர விரும்பும் நபர்கள் ஓமானில் நுழைவதற்கு ஏற்கெனவே எடுக்கப்பட்டு உறுதிப்படுத்தப்பட்ட ஹோட்டல் முன்பதிவு, சுகாதார காப்பீடு மற்றும் ரிட்டர்ன் டிக்கெட் உள்ளிட்டவை கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும் என்றும் இவை ஓமான் நுழைவதற்கு நிபந்தனைகளாக எடுத்துக்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையானது ஓமானுக்கு வருகை தரவும், சுற்றுலாத்துறையை மேம்படுத்தவும், தேசிய பொருளாதாரத்தில் அதன் பங்களிப்பை உயர்த்தவும் அதிக சுற்றுலாப் பயணிகளை ஊக்குவிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், அந்த 103 நாடுகளின் பெயர்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாடுகளில் இந்தியா, மலேஷியா, சிங்கப்பூர், கனடா போன்ற நாடுகளும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
விசா இல்லாமல் 10 நாட்கள் வருகை புரிய அனுமதிக்கப்பட்டுள்ள நாடுகள்
இந்தியா
போர்ச்சுக்கல்
ஸ்வீடன்
நார்வே
இத்தாலி
அண்டோரா
லாட்வியா
பல்கேரியா
சான் மரினோ
சுவிட்சர்லாந்து
கிரொட்டியா
லிக்டென்ஸ்டைன்
மாசிடோனியா
ஹங்கேரி
செர்பியா
ஜார்ஜியா
எஸ்டோனியா
டென்மார்க்
ஜெர்மனி
கிரீஸ்
ஐஸ்லேண்ட்
பெல்ஜியம்
ரோமானியா
ஸ்லோவேனியா
பின்லாந்து
லக்ஸம்போர்க்
மால்டா
மொனாகோ
சிப்ரஸ்
உக்ரைன்
ஸ்பெயின்
Czech ரீபப்லிக்
வாடிகன்
ஆஸ்திரியா
அயர்லாந்து
பிரிட்டன்
போலந்து
ஸ்லோவாகியா
பிரான்ஸ்
லிதுவேனியா
மால்டோவா
நெதர்லாண்ட்ஸ்
எக்குவடோர்
பொலிவியா
வெனிசுலா
கொலம்பியா
உருகுவே
பராகுவே
சுரினாம்
அர்ஜென்டினா
பிரேசில்
சிலி
ஜப்பான்
தாய்லாந்து
சவுத் ஆப்பிரிக்கா
லெபனான்
ஹாங் காங்
ரஷ்யா
சீனா
செய்செல்லெஸ்
அமெரிக்கா
புருனே தாருஸ்ஸலாம்
துருக்கி
சவுத் கொரியா
நியூஸிலாந்து
ஈரான்
கானா
ஆஸ்திரேலியா
இந்தோனேஷியா
தைவான்
கனடா
மலேஷியா
மக்காவு ஐஸ்லாந்து
சிங்கப்பூர்
அஜர்பைஜான்
உஸ்பேகிஸ்தான்
பெலாரஸ்
தஜிகிஸ்தான்
கிர்கிஸ்தான்
கோஸ்டா ரிக்கா
நிகரகுவா
மொரோக்கோ
அர்மேனியா
பனாமா
போஸ்னியா & ஹெர்ஸேகோவினா
துர்க்மெனிஸ்தான்
ஹோண்டுராஸ்
குவாத்தமாலா
கஜகஸ்தான்
லாவோஸ்
அல்பேனியா
பூட்டான்
பெரு
மாலத்தீவுகள்
சால்வடார்
வியட்நாம்
கியூபா
மெக்ஸிகோ
ஜோர்டான்
எகிப்து
துனிசியா
அல்ஜீரியா
மாரிடேனியா
செய்திக்கு நன்றி - khaleejtamil