குவைத்தில், 31 வயதான இந்தியர் ஒருவர் வேலை இழந்ததை அடுத்து தற்கொலை செய்து கொண்டதாக அல் அன்பா டெய்லி செய்தி வெளியிட்டுள்ளது.
அபு ஹலிஃபாவில் உள்ள அவரது குடியிருப்பில் இந்தியர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக உள்துறை அமைச்சகத்திற்கு தகவல் கிடைத்தது.
பாதுகாப்புப் படையினரும் தடயவியல் ஊழியர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கயிற்றில் தொங்கிய உடலைக் கண்டனர்.
அவரது நண்பர்களின் கூற்றுப்படி, நிறுவனம் அவரது சேவைகளை நிறுத்தியதை அடுத்து அந்த நபர் தனது உயிரை மாய்த்துக்கொண்டதாக குறிப்பிட்டுள்ளது.