இறக்காமம் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பாலர் பாடசாலைகளை கொவிட் 19 தொற்று நோயின் பின்னர் மீள ஆரம்பிப்பதற்காக பாலர் பாடசாலைகளுக்கு தேவையான (Hand Wash Basin) வழங்கி வைப்பு
இறக்காமம் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட வசதி குறைந்த பாலர் பாடசாலை மாணவர்களின் ஆரோக்கியமான சூழல், சுகாதார நலன்களை மேம்படுத்தும் நோக்கில் பெண்கள் மற்றும் சிறுவர் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் பாலர் பாடசாலை மாணவர்கள் கை கழுவி சுத்தம் செய்து கொள்வதற்கு தேவையான ( Hand Wash Basin) இன்று 2020.12.28 ஆம் திகதி திங்கட் கிழமை முன் பிள்ளைப் பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் R.M. IMDAD தலைமையில் வழங்கிவைக்கப்பட்டது.
இதன் போது பிரதம அதிதியாக உதவி பிரேச செயலாளர் திருமதி F.M. நஹீஜா முஸாபீர் கலந்து கொண்டு பொறுப்பாசிரியர்களுக்கு இவ் உபகரணங்களை வழங்கி வைத்தார்.
மேலும் இந் நிகழ்வில் கணக்காளர் A. L. பாத்திமா றிம்ஸியா, நிருவாக உத்தியோகத்தர் J. M. ஜெமீல், சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் எம்.எச். வஹாப், உளவளத்துணை உதவியாளர் ஏ.எச். றகீப் மற்றும் பிரதேச செயலக பெண்கள் மற்றும் சிறுவர் அபிவிருத்திப் பிரிவில் கடமைபுரியும் உத்தியோகத்தர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.