கொரோனா தொற்றினால் இறந்ததாக அறிவிக்கப்பட்டு தொடர்ந்தும் எரிக்கப்பட்டு வரும் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்ய அனுமதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி இலங்கையிலும் இலங்கைக்கு வெளியேயும் பல்வேறு கவனயீர்ப்பு நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றது.
அதில் ஒரு அங்கமாக ஜப்பானில் வாழும் இலங்கையர்கள் பலரினால் ஜனாசா எரிப்பு எதிராக அமைதியான முறையில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று நேற்று முன்னெடுக்கப்பட்டது.