Ads Area

தன் வீட்டுப் பணிப்பெண்னை கொலை செய்த குற்றத்திற்காக குவைத் பெண் ஒருவருக்கு அந் நாட்டு நீதிமன்றம் மரணதண்டனை விதிப்பு.

தகவல் - சம்மாந்துறை அன்சார்.

கடந்த 2019 டிசம்பர் 08ம் திகதி குவைத்தில் தனது வீட்டில் பணிபுரிந்த பிலிப்பைன்ஸ் நாட்டு பணிப்பெண்னை சித்திரவதை செய்து கொலை செய்த குற்றத்திற்காக குவைத் பெண் ஒருவருக்கு அந் நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. கொலைக் குற்றத்திற்கு உடந்தையாக இருந்த அவரது கணவருக்கு 4 வருட சிறைத்தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.

குவைத் நீதிமன்றத்தின் இத் தண்டனையானது  நியாயமானதாகவுள்ளதாக பிலிப்பைன்ஸ் தூதரகத்தின் தலைமை ஆலோசகர் வழக்கறிஞர் ஷேக்கா பசியா அல்-சபா கூறியுள்ளார். 

பணிப்பெண் வில்லாவெண்டேவின் கொலை வழக்கு தொடர்பான நீதிமன்றத்தின் தீர்ப்பு பிலிப்பைன்ஸ்கள் யாருக்கும், எங்கும் அடிமை இல்லை என்பதையும், பலவீனமான மற்றும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு எப்போதும் நீதி உண்டு என்பதை உணர்த்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பணிப் பெண் வில்லாவெண்டே கொலை செய்யப்பட்டதனைத் தொடர்ந்து 2020 ஜனவரி 3 ஆம் தேதி பிலிப்பைன்ஸ் அரசு வீட்டுத் தொழிலாளர்களை குவைத்துக்கு அனுப்ப தடை விதித்திருந்தது பின்னர் கொலைக் குற்றத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டு நிச்சயம் தண்டனை பெற்றுக் கொடுக்கப்படும் என்றும் குவைத்தில் பணிபுரியும் பிலிப்பைன்ஸ் நாட்டவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என்றும் தெரிவித்து இரு தரப்பினர்களுக்கு இடையில் மேற்கொள்ளப்பட்ட இறுக்கமான ஒப்பந்தத்தின் பின்னர் அத்தனை நீக்கப்பட்டது.

மேற்கொள்ளப்பட்ட இறுக்கமான  ஒப்பந்தத்தின் அடிப்படையில் குவைத் முதலாளிகள் தங்கள் வீட்டுப் பணிப்பெண்களின் பாஸ்போர்ட்டுகளை பறிமுதல் செய்யக் கூடாது என்றும், பணிப் பெண்கள் தங்களுக்கென்று தனியாக தொலைபேசிகளை வைத்திருக்க அனுமதிக்கப்பட வேண்டும் எனறும், ஒரு நாளைக்கு 12 மணி நேரத்திற்கு மேல் வேலைக்கு அமர்த்தப் கூடாது என்றும்,  போதுமான ஓய்வு மற்றும் வார விடுமுறை வழங்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவைத்தில் 230,000 பிலிப்பைன்கள் உள்ளனர், அவர்களில் 160,000 பேர் வீட்டு வேலைகளில் ஈடுபட்டுள்ளனர்.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe