Ads Area

மாளிகைக்காடு பிரதேசத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவருக்கு தொற்று..!!

 நூருள் ஹுதா உமர்.

அம்பாறை மாவட்ட காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி காரியலய நிர்வாகத்தின் கீழுள்ள மாளிகைக்காடு கிழக்கு பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 05 பேர் கொரோனா தொற்றாளர் என இன்று (14) அடையாளப்படுத்தப்பட்டனர்.

மேலும் இவர்கள் நடமாடிய பகுதிகளை சுகாதார துறையினர் இன்று காலை முதல் நண்பகல் வரை முடக்கி மக்கள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன் அப்பகுதியில் உள்ளவர்களுக்கு காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி காரியலய சுகாதார ஊழியர்களினால் பி.சி.ஆர் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டது.

மட்டுமின்றி மாளிகைக்காடு மத்தி- கிழக்கு எல்லைகளை இணைக்கும் உள்ளகப்பாதைகள் கயிற்றினால் மறிக்கப்பட்டு போக்குவரத்து தடைபோடப்பட்டுள்ளது.

இது பற்றி காரைதீவு பிரதேசசபைத் தவிசாளர் கி. ஜெயசிறில் கருத்து தெரிவிக்கும் போது. எமது பிராந்தியத்தில் கொரோனாத் தொற்று மிக வேகமாக பரவி வருகின்றது. அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் சனநெரிசலை மட்டுப்படுத்த இவ்வாறான வேலைத்திட்டங்ககளை முன்னெடுத்து வருகின்றோம்.

காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம், காரைதீவு பிரதேச சபை, காரைதீவு பிரதேச செயலகம்  ஆகியன இணைந்து தீர்மானம் மேற்கொண்டு இந்த வீதித் தடையைப் போட்டு சனநெரிசலை வெகுவாக குறைத்து மக்களூடாக கொரோனா பரவுதலை தடுக்கும் நோக்கில்தான் இத்தடையை போட்டுள்ளோம் என்றார். வீதிகளை மரிக்கும் இந்த வேலைத்திட்டத்தில் உப தவிசாளர் ஏ.எம். ஜாஹீர், காரைதீவு பிரதேச சபை உறுப்பினர்களான ஏ.ஆர்.எம். பஸ்மீர், எம்.எச்.எம். இஸ்மாயில் என பலரும் கலந்து கொண்டனர்.  



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe