Ads Area

"மீஸானின் மகுடம் விருது- 2020" சாய்ந்தமருதை சேர்ந்த கவிஞர் நஸ்ருதீன் அலிக்கானுக்கு கிட்டியது.

"மீஸானின் மகுடம் விருது- 2020" சாய்ந்தமருதை சேர்ந்த கவிஞர் நஸ்ருதீன் அலிக்கானுக்கு கிட்டியது.

கலை,இலக்கிய, ஊடக,நாடக துறையில் பிரகாசிக்கும் கலைஞர்களை கௌரவிக்கும் மீஸானின் மகுடம் விருதுகளின் 2020 ஆம் ஆண்டுக்கான விருது சாய்ந்தமருதை சேர்ந்த கவிஞர் நஸ்ருதீன் அலிக்கானுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

அல்- மீஸான் பௌண்டஷன், ஸ்ரீலங்கா தவிசாளர் யூ.எல்.என். ஹுதா உமரின் தலைமையில் கோவிட் 19 தொற்றுப் பரவல் காரணமாக மிக எளிமையாக நடைபெற்ற இந்நிகழ்வில் பொதுசேவை ஆணைக்குழுவின் உறுப்பினரும், சிரேஷ்ட நிர்வாக சேவை அதிகாரியுமான ஏ.எல்.எம். சலீம், வீதி அபிவிருத்தி அதிகாரசபை கல்முனை காரியாலய பிரதம இலிகிதரும் அமைப்பின் பிரதிப் பொதுச்செயலாளருமான எம்.ஏ.சி. நிஸார், அமைப்பின் கல்முனை பிராந்திய இணைப்பாளர் ஏ.ஆர்.ஏ.ஜௌஸான், மருதம் கலைக்கூடல் தலைவரும் அமைப்பின் கலை,இலக்கிய செயலாளருமான அஸ்வான் எஸ். மௌலானா உட்பட கலை,இலக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டு கவிஞர் நஸ்ருதீன் அலிக்கானுக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டு சான்றிதழ் மற்றும் விருது வழங்கி கௌரவித்தனர்.

கடந்த காலங்களில் தென்னிந்திய திரைப்பட நடிகர் பத்மஸ்ரீ டாக்டர் விவேக், நடிகர் விதார்த், இயக்குனர் பாரதிராஜா, போன்றவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த இந்த விருதுகள் பல உள்நாட்டு கலைஞர்களுக்கும் கடந்த வருடங்களில் வழங்கப்பட்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

( ஊடக பிரிவு )



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe