Ads Area

கிழக்கில் மழை வெள்ளம் காரணமாக பிடிக்கப்படும் அதிகளவான மீன்கள்.

(பாறுக் ஷிஹான்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் பருவ மழை காரணமாக அங்குள்ள ஆறு குளம் ஆகியவற்றில் அதிகளவான மீன் இனங்கள் பிடிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.

இம்மாவட்டத்தில் உள்ள பிள்ளையாரடி பகுதியில் வடிந்தோடும் வெள்ள நீரில் சிறு மீன் முதல் பெரிய மீன்கள் கட்டுவலை மற்றும் எறி வலை மூலம் பிடிக்கப்பட்டு அவ்விடத்தில் விற்பனை செய்யப்படுகின்றன.

இவ்வாறு அதிகமான பிடிக்கப்படும் மீன்களை சமையலுக்காக அவ்விடத்தில் மீனவர்களால் விற்கப்படுவதுடன் மக்கள் ஆர்வமாக கொள்வனவு செய்வதை காண முடிகிறது. தற்போது பெய்யும் மழை காரணமாக நன்னீர் மீன்கள் அதிகளவாக பிடிக்கப்படுகிறது.

இதில் கோல்டன் செப்பலி, கணையான், கொய், கொடுவா, பொட்டியான், வெள்ளையாபொடி, இறால், நண்டு வகைள் போன்ற மீன்கள் அதிகளவான விலையில் விற்பனை செய்யப்படுவதுடன் இதர மீன்கள் குறைந்த விலையில் விற்பனையாகின்றன. இதனால் நன்னீர் மீன் பிடித்தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் நல்ல வருமானம் ஈட்டக்கூடியதாக உள்ளதாக தெரிவித்தனர்.

இதே வேளை பிள்ளையாரடி துரைமடல் துரையடி மீன்சந்தையும் வெள்ள நீரினால் பாதிக்கப்பட்ட நிலையில் மீனவர்கள் பிரதான வீதிகளில் மீன் விற்பனையில் ஈடுபட்டுள்ளனர்.






Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe