Ads Area

வீதியில் நின்றவரை வாளால் வெட்டி விட்டு தப்பிச் சென்ற குழுவைத் தேடி சம்மாந்துறை பொலிஸார் வலைவீச்சு.

பாறுக் ஷிஹான்.

வீதியில் நின்ற நபரை முன்விரோதம் காரணமாக வெட்டிய  சந்தேக நபர்களை சம்மாந்துறை பொலிஸார் தேடி வருகின்றனர்.

கடந்த 2020.12.26 ஆம் திகதி அன்று மாலை 6 மணியளவில் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீரமுனை பகுதியில் வீதியில் நின்ற 30 வயது நபர் ஒருவரை முன்விரோதம் காரணமாக மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் வந்த 10 பேர் அடங்கிய குழுவினர் வாள் மற்றும் ஆயுதங்களால் தாக்கி படுகாயமடையச்செய்து தப்பி சென்றுள்ளனர்.

இத்தாக்குதல் காரணமாக படுகாயமடைந்த நபர் உயிராபத்துடன் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

இத்தாக்குதல் சம்பவத்தின் போது வாள்வெட்டு குழு உறுப்பினர் ஒருவரும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதன் போது அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெயந்த ரட்நாயக்கவின் கட்டளையின் படி சம்மாந்துறை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி நௌபரின் வழிகாட்டலில் குற்றப்புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரி விஜயராஜா தலைமையில் விசேட குழு நியமிக்கப்பட்டு விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை (27) சம்மாந்துறை பதில் நீதிவான் முன்னால் ஆஜர்படுத்தப்பட்டு சிறைச்சாலை உத்தியோகத்தர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளார்.

மேலும் தப்பி சென்ற சந்தேக நபர்களினால் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட வாள் கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் விசாரணைக்குழுவினர் மீட்டுள்ளதுடன் ஏனைய தப்பி சென்ற சந்தேக நபர்களை தேடும்பணி முடக்கிவிடப்பட்டுள்ளது.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe