Ads Area

சம்மாந்துறை, மன்னார், மரிச்சக்கட்டு ஆகிய இடங்களில் நிலத்தடி நீர் மட்டம் 100 அடிக்கு கீழே உள்ளது.

நாட்டில் இரண்டு பகுதிகளில்  மட்டுமே குறைந்த அளவு நிலத்தடி நீர் கொண்டிருப்பதாக அடையாளம் காணப்பட்டது என நீர்வழங்கல் துறை அமைச்சர் வாசுதேவ நானாயக்கர தெரிவித்தார்.

மேலும் நாட்டின்  மற்ற எல்லா பகுதிகளிலும் நிலத்தடி நீரின் அளவு ஆறு அடி முதல் பல அடிகள்   வரை இருக்கும் என்று அவர் கூறினார்.

பல்வேறு பகுதிகளில் நிலத்தடி நீரின் துல்லியமான அளவை தீர்மானிக்க ஏற்கனவே ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக  கூறினார்.

இந்த அறிக்கையை அவர் ஏற்கனவே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் சமர்ப்பித்து உள்ளதாகவும்,  மேலும் கோவிட் -19 இனால் இருந்து இறக்கும் நபர்களின் உடல்களை தகனம் செய்வதற்கோ அல்லது அடக்கம் செய்வதற்கோ  கண்டறிய உருவாக்கப்பட்ட நிபுணர் குழு  இயங்கி வருவதாகவும் தெரிவித்தார்.

சில பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் 6, 10 முதல் 15 அடி வரை வேறுபடுவதாக அறிக்கை காட்டியுள்ளது என்று நானாயக்கார  தெரிவித்துள்ளார்.

கண்டறியப்பட்ட சோதனைகளில் மன்னார், மரிச்சக்கட்டு மற்றும் சம்மாந்துரை ஆகிய இடங்களில், நிலத்தடி நீர் மட்டம் 100 அடிக்கு கீழே இருப்பதைக் காட்டியுள்ளதாக  அவர் மேலும் தெரிவித்தார்.

COVID-19 பாதிக்கப்பட்ட உடல்களை புதைப்பதற்கும் பின்னர் அடக்கம் செய்யப்பட்ட இடத்தை ஒரு கான்கிரீட் ஸ்லாப் மூலம் சீல் வைப்பதற்கும் சில கருத்துக்கள் கூறப்பட்டு இருந்தாலும்  , இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு சுகாதார அதிகாரிகளின் அனுமதி தேவைப்படும் என்று அவர் கூறினார்.

மடவளை நிவுஸ்.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe