தகவல் - சம்மாந்துறை அன்சார்.
சவுதி அரேபியாவில் உள்ள மக்கா, மினா பிரதேசத்தில் 23 வயதுடைய இந்தோனேசிய இளம் பெண் ஒருவரின் சடலம் சூட்கேஸில் (Suitcase) அடைக்கப்பட்டு கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
சவுதி அரேபிய மக்கா, மினா பகுதியில் உள்ள வீதியில் நீளமான சூட்கேஸ் ஒன்று கவனிப்பாரற்றுக் கிடந்தமையினால் அதனை திறந்து பார்த்த சவுதியைச் சேர்ந்த ஒருவர் உள்ளே இளம் பெண் ஒருவரின் சடலம் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து உடனே சவுதி பொலிசாருக்கு தகவல் வழங்கியதனையடுத்து பொலிசார் விசாரனைகளை மேற் கொண்டு வருகின்றனர்.
மரணமடைந்த பெண்ணின் கபீல் (sponsor) யிடம் மேற் கொண்ட விசாரனையில் தனது வீட்டிற்கு பணிக்கு வந்த குறித்த பெண் சில காலம் வேலை செய்து விட்டு, வீட்டை விட்டுச் சென்றுவிட்டதாக தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து குறித்த கொலைச் சம்பவம் தொடர்பில் சவுதி அரேபிய பொலிசாரும், இந்தோனேசிய துாதுவராலய அதிகாரிகளும் மேற்கொண்ட மேலதிக விசாரனையின் அடிப்படையில் சந்தேகத்திற்கு இடமாக சவுதியில் வேலை செய்யும் இரு இந்தோனேசிய நாட்டவர்களை கைது செய்துள்ளதோடு, மேலதிக விசாரனைகளையும் முன்னெடுத்து வருகின்றன.