வெளிநாடுகளில் உள்ள கத்தார் விசா மையங்களை மீண்டும் திறப்பதன் ஒரு பகுதியாக, இலங்கை நாட்டின் கொழும்பில் உள்ள கத்தார் விசா மையம் எதிர் வருகின்ற ஜனவரி 20, 2021 அன்று மீண்டும் திறக்கப்பட உள்ளதாக கத்தார் உள்துறை அமைச்சகம் (MoI) அறிவித்துள்ளது.
கொழும்பில் உள்ள கத்தார் விசா மையத்ததிற்குச் செல்வதற்கான முன்பதிவு இன்று (13-01-2021) முதல் தொடங்கும் என்றும், QVC வலைத்தளம் மூலம் முன்பதிவு செய்ய முடியும் என்றும் தெரிவித்துள்ளது.
கத்தார் சமீபத்தில் இந்தியா, நேபாளம், பாகிஸ்தான் மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளில் உள்ள விசா மையங்களைத் திறந்துள்ளதுடன், பங்களாதேஷ் வீட்டுப் பணியாளர்களுக்கான விசா விண்ணப்பங்களையும் பெறத் தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத் தக்கதாகும்.